கொரோனா நெருக்கடியிலும் துவளாத எடப்பாடியார்..!! மக்கள் நலன் காக்கும் முதல்வர் என அமைச்சர் நெகிழ்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 12, 2020, 1:32 PM IST
Highlights

மேலும் 27,721 நபர்களுக்கு கீமோதெரபியும், 11,678 நபர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6,664 நபர்களுக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் கொரோனா தொற்று காலத்திலும் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா தொற்று காலத்திலும் தமிழ்நாடு அரசு கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்குதடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. 

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காலத்திலும் புற்று நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் தங்குதடையின்றி வழங்கவேண்டுமென தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,31,352 நபர்கள் புற்று நோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 48, 647 நபர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் 2,191 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 27,721 நபர்களுக்கு கீமோதெரபியும், 11,678 நபர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

6,664 நபர்களுக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்று நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும், அரசு மருத்துவமனைகள் கூடுதல் பளுவினையும் திறம்பட எதிர்கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் உயரிய சேவைகள் வழங்கியதன் மூலம் விலைமதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள் பல்வேறு தரப்பினரின் தொடர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!