அயராமல் உழைக்கும் ஸ்டாலின்.. கொரோனா 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. மாஸ் காட்டும் அமைச்சர் நாசர்.!

Published : May 19, 2021, 03:43 PM ISTUpdated : May 19, 2021, 04:02 PM IST
அயராமல் உழைக்கும் ஸ்டாலின்.. கொரோனா 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்.. மாஸ் காட்டும் அமைச்சர் நாசர்.!

சுருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அயாராது உழைத்து வருவதால்,  கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தாயாரக உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அயாராது உழைத்து வருவதால்,  கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தாயாரக உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையினை பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.அப்போது ஆவடி வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆக்சிஜன் கருவிகளை அமைச்சர் நாசரிடம் வழங்கினர். பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு தோறும் காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு பணிகுறித்து மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியினை நாசர் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்து அதனை விரைவில் பூங்காவாக உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு பகல் பாராது அயாராது உழைத்து வருவதால் தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தாயாரக உள்ளது என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!