கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..!

By vinoth kumarFirst Published Oct 20, 2020, 6:52 PM IST
Highlights

கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒரு நாள் முன்னோட்டமாக பொது ஊரடங்கு அறிவித்து பின்னர், 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். அதன்பின் அவ்வப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த வகையில் இன்று 7-வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- 

* ஊரடங்கு காலம் முடிந்து வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளோம்.

* கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.

* அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

* உலக அளவில் மற்ற நாடுகளைவிட கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு 

* இந்தியாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

* இந்தியா மேற்கொண்ட அதிகளவிலான பரிசோதனை இந்த போரில் முக்கிய ஆயுதமாக இருந்தது.

* பொருளாதாரம் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

* நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன.

* கொரோனா சிகிச்சைக்கு நம்நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை.

* எச்சரிக்கையாக இருக்கத் தவறுவோர் பாதிக்கப்படுவதுடன் மற்றவர்களுக்கும் அவர்கள் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

* கொரோனா பாதிப்பு குறைவதைக் கண்டு பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதை காண்கிறோம்.

* கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழப்புடன் இருக்க வேண்டும். 

* முகக்கவசமின்றி வெளியே வருவதால் உங்கள் உயிர் மட்டுமின்றி குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து

* கொரோனா தொற்று இனிமேல் இல்லை என எண்ணி அஜாக்கிரதையாக இருந்துவிட வேண்டாம். 

*  பலநாடுகளில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்த நேரத்தில் இது மேலும் அதிகமாக பரவியது. 

* கொரோனாவுக்கான தடுப்பூசி வரும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

*  திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. 

* பண்டிகை காலத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

* கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது.

* எப்போதெல்லாம் பொதுவெளியில் செல்கிறோமா அப்போதெல்லாம் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

click me!