பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..!

By vinoth kumarFirst Published Oct 20, 2020, 6:33 PM IST
Highlights

மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

7வது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பாடுபட்டு வருவதால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நமக்கு வராது என்று எண்ண வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைப் பார்த்து மக்கள் எவ்வித அச்சமுமின்றி முகக் கவசம் இல்லாமல் சாதாரணமாக வெளியே வருவது தெரிகிறது. 

இதனால், உங்களுக்கும் உங்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கும்தான் கடினமான சூழலை ஏற்படுத்துகிறீர்கள். கொரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால், வெளியே செல்லும்போது 2 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கை கழுவுதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும். உடலில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும்.

நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வைரஸ் என்பது முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றும் கூறியுள்ளார். 

click me!