ஜெ.அன்பழகன் இடத்தை பிடிக்கக் காத்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜனுக்கும் கொரோனா... திமுகவில் அதிர்ச்சி

By Thiraviaraj RMFirst Published Jun 17, 2020, 10:37 AM IST
Highlights

இரு திறமைகளும் படைத்தவரைத்தான் மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமிக்க முடியும். அந்த வகையில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான கலைராஜனை மாவட்ட செயலாளாரக்க திட்டமிட்டு இருந்தனர். 

ஜெ. அன்பழகனை மாவட்ட செயலாளராக கொண்டிருந்த சென்னை மேற்கு மாவட்ட திமுகவுக்கு அவரது மறைவை அடுத்து யாரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது திமுகவுக்குள் தற்போது தீவிர விவாதமாகியிருந்தது.

 

சென்னை மேற்கு மாவட்டம் என்பது திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயம் இருக்கும் பகுதிக்குள் வருகிறது. மேலும் மிக முக்கியமான வணிக ஏரியாக்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்துக்கு செயலாளர் ஆனால் வரவும் அதிகம், செலவும் அதிகம். வரவைக் கையாள வேண்டும்,செலவை எதிர்கொள்ள வேண்டும். இந்த இரு திறமைகளும் படைத்தவரைத்தான் மாவட்டத்துக்கு பொறுப்பாக நியமிக்க முடியும். அந்த வகையில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான கலைராஜனை மாவட்ட செயலாளாரக்க திட்டமிட்டு இருந்தனர்.

 

இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதிமுக உடைந்தபோது தினகரன் அணிக்குச் சென்று அங்கு ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார் கலைராஜன். திமுக எடுத்து வந்த கொரோனா உதவி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர் இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளாவது அக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் இப்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

click me!