வரும் 21ஆம் தேதிக்குப் பின் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழியும்..!! சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி தகவல்..!!

Published : Jun 17, 2020, 10:24 AM IST
வரும் 21ஆம் தேதிக்குப் பின் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழியும்..!! சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி தகவல்..!!

சுருக்கம்

இது வளிமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகிய பயோ புரோட்டின் கூறுகளில் நுழைந்து, பூமியின் மேற்பரப்பில் பலமடங்கு விரிவடைந்து, காற்றின் வாயிலாக வருகிறது. 

இந்த மாதம் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் முற்றிலும் செயல் இழக்கும் என சென்னையைச் சேர்ந்த அனுபவமிக்க அணு விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் இந்த வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டில்  கொரோனா தோற்று மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா பிடியில் மூழ்கியுள்ள நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி ஒருவர் இந்த மாதம் நிகழும் சூரிய கிரகணத்திற்கு பின்னர் கொரோனா வைரஸ் செயலிழக்கும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வுசெய்து வருகிறேன், 

செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளில் பணி செய்த அனுபவம் எனக்கு உள்ளது, இப்போதும் கூட சில நாடுகளுக்கு நான் ஆலோசகராக இருந்து வருகிறேன், கொரோனா பற்றிய முக்கியமான செய்தி என்னவென்றால், பாதிக்கு மேற்பட்டோர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். என்னை பொறுத்த அளவில்  பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை இந்த நோய் தாக்குவதில்லை, கொரோனா பூமியின் காற்று மண்டலத்தில் உலகமெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ், இது உலகளாவிய செயல்பாடு, 2019 டிசம்பரில் பல கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன, அதன் தாக்கம்தான் இது. அப்போது நாம் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, இது ஒருவிதமான நியூட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ். 

இது வளிமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகிய பயோ புரோட்டின் கூறுகளில் நுழைந்து, பூமியின் மேற்பரப்பில் பலமடங்கு விரிவடைந்து, காற்றின் வாயிலாக வருகிறது.  இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது, வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து  பூமியை மறைக்கும் போது இந்த கொடிய வைரஸ் தானாகவே மறையக் கூடிய தன்மை வாய்ந்தது. அந்த கிரகணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரசை செயலிழக்க வைக்கும், ஜூன் 21க்கு பிறகு சுத்தமாக மறைந்து விடும் இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன். இதையேதான் நாசாவில்  பணியாற்றும் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார் என அந்த அணு விஞ்ஞானி கூறியுள்ளார். இது ஒருபுறமிருக்க செப்டம்பர் 23-ஆம் தேதி நிகழும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் மட்டுப்படும் என்று ஜோதிடர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?