கோவாவில் கொரோனா நோ..! ஆனால்2 வருடம் முககவசம்,சமூக விலகல் கடைபிடிக்க முதல்வர் உத்தரவு.!!

By Thiraviaraj RMFirst Published Apr 27, 2020, 11:56 PM IST
Highlights

உலகத்தையே தின்னு துப்பிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்றால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஓர் மகிழ்ச்சி கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாநிலமாக கோவா இருப்பது.

T.Balamurukan

 உலகத்தையே தின்னு துப்பிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்றால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஓர் மகிழ்ச்சி கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாநிலமாக கோவா இருப்பது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் பேசும்போது, "முகக்கவசம் அணிவதும், சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கும் மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். இது 2 ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும். கோவா வருவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோர் வருவதை எண்ணி கவலை கொள்கிறோம். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கான எல்லைகளை பூட்டுவதைத் தொடர விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார். 

click me!