தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியதா..? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்..!

By vinoth kumarFirst Published Jun 11, 2020, 11:34 AM IST
Highlights

கொரோனா மரணம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு முதல்வர் பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது.

சமூக பரவலாக மாறக்கூடாது என்பதற்காகவே மண்டங்களாக பிரித்து கணிகாணிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது.

கொரோனா மரணம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாருக்கு முதல்வர் பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்க முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? தினந்தோறும் அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்கிறோம். இந்தியாவில் தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவு. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சமூக பரவலாக மாறக்கூடாது என்பதற்காகவே மண்டங்களாக பிரித்து கணிகாணிக்கப்படுகிறது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது.  தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு விட்டது. வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19000 கடந்துள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார். 

click me!