நாடு முழுவதும் ஜூன் 15 முதல் மீண்டும் முழு ஊரடங்கு..? உண்மை நிலவரம் என்ன..?

By Thiraviaraj RMFirst Published Jun 11, 2020, 10:54 AM IST
Highlights

உலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை நெருங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 

உலக அளவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை நெருங்கிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகெங்கும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,46,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,34,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கு என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 1 முதல் ஊரடங்கு 1 என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படிஉணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்று தகவல் வெளியானது. விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது

.

ஆனால் இந்தத் தகவல் போலி என்றும் நம்ப வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. 

click me!