குட்நியூஸ்.. தமிழகத்தில் வேகமாக குறைகிறது கொரோனா பாதிப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 2, 2021, 11:04 AM IST
Highlights

செங்கல்பட்டு ஆலை தொடர்பாக மிக விரைவில் மத்திய அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

செங்கல்பட்டு ஆலை தொடர்பாக மிக விரைவில் மத்திய அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது. கொரோனா குறைவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. கடந்த 4 நாட்களாக நலன் பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். ஜூன் மாதத்துக்குள் தமிழத்துக்கு 42 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நேற்றிரவு வந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

செங்கல்பட்டு ஆலை தொடர்பாக மிக விரைவில் மத்திய அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இப்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. பல மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. சேலம் உருக்காலை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் 400 படுக்கைகள் காலியாக உள்ளன. 

click me!