கொதறி வைத்த கொரானா உபகரண கமிஷன்...? ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு குறி வைத்து அடங்கிப்போன அமைச்சர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 6:51 PM IST
Highlights

144 தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8 நாட்களாகியும் வைரஸ் கட்டுப்படுத்தும் முக கவசம் வெண்டிலேட்டர் குழு ஆய்வு செய்யும் டெஸ்ட் கேட்கும் கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று தமிழகத்தில் பரவ ஆரம்பித்தது முதலே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுறுசுறுப்பானார். 

ஆய்வுக்கூட்டம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நோயாளிகளிடம் விசாரணை என நாள்தோறும் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தார். அதுதான் இப்போது பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளது. கடந்த 20 நாள்களாக தமிழக ஊடகங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜயபாஸ்கர் விளங்க ஆரம்பித்தார். முதல்வரைவிட அவர் பின்னால்தான் அதிகமான செய்தியாளர்கள் வலம்வந்தார்கள். 

ஒருகட்டத்தில் சமூக வலைதளங்கள் அனைத்திலும் அவரைப் பற்றிய செய்திகளே ஆக்கிரமித்தன. அதன் உச்சமாக, ‘தமிழகத்தின் கெஜ்ரிவால்’, ‘வாழும் போதிதர்மர்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கருக்கு துதிபாடும் வேலை ஆரம்பித்தது. முதல்வரின் கவனத்துக்கும் இது போனது. முதல்வரிடம் ‘அமைச்சர் தனக்கென ஒரு ஐ.டி டீம் வைத்துள்ளார். அவர் நடப்பது, ஆய்வுசெய்வது, பிரஸ்மீட் நடத்துவது எல்லாமே அந்த டீம் கொடுக்கும் பிளான்படியே நடைபெறுகின்றன.

அரசின் திட்டங்களைப் பிரபலப்படுத்துவதைவிட அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறார்’ என்று சீனியர் அமைச்சர்கள் சிலரும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரும் போட்டுக்கொடுத்திருக்கின்றனராம். இதுபற்றி, முதல்வர் அலுவலகத்திலிருந்து சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷிடமும் சில விவரங்கள் கேட்டு வாங்கப்பட்டனவாம். முதல்வர் அலுவலகத்திலிருந்து கேட்ட விவரங்களை, துறையின் செயலாளர் கொடுத்துள்ளார்.

ஆனால், இதை வைத்தே இருவருக்கும் பிணக்கு என்று கோட்டையில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் விஜயபாஸ்கரை அழைத்த முதல்வர் தரப்பு ‘இனி கொரோனா குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை, துறையின் செயலாளர் நடத்திக்கொள்ளட்டும். நீங்கள் மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்’ என்று சொன்னாராம்.  

ஆனால், கமிஷன் பிரச்சினையால் உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம் கட்டப்பட்டார் எனக்கூறப்படுகிறது. முக கவசம், வென்டிலேட்டர், ஆய்வு செய்யும் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் நிர்வாக இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் மூலம் கொள்முதல் தொடர்பாக கமிஷன் 30 முதல் 40 சதவீதம் வரை கேட்டதால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

டாக்டர் செல்வராஜ், சந்திரசேகர், டாக்டர் சித்தரஞ்சன் ஆகியோர் மூலம் உமாநாத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 144 தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8 நாட்களாகியும் வைரஸ் கட்டுப்படுத்தும் முக கவசம் வெண்டிலேட்டர் குழு ஆய்வு செய்யும் டெஸ்ட் கேட்கும் கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது

click me!