கொரோனா குறைஞ்சு போச்சு.. இவங்க முகக்கவசம் அணிய தேவையில்ல.. சுகாதாரத்துறை அமைச்சர் செம்ம தகவல்.

Published : Feb 16, 2022, 11:53 AM ISTUpdated : Feb 16, 2022, 11:55 AM IST
கொரோனா குறைஞ்சு போச்சு.. இவங்க முகக்கவசம் அணிய தேவையில்ல.. சுகாதாரத்துறை அமைச்சர் செம்ம தகவல்.

சுருக்கம்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்து இருப்பதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் படிப்படியாக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் 35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோப்போடிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், 

மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முதலாக ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கம்  தமிழகத்தில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார். கேன்சர் நோயினை முதல் நிலையிலேயே கண்டறிவதற்காக தொடர் முயற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் , மதுரை, நாகை , சேலம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாகவும் முதல் மற்றும் இரண்டாம் நிலையிலேயே புற்றுநோய் நோயாளிகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரைவில் 50 லட்சம் பேர் பயனடைய உள்ளதாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை சித்தலபாக்கம் பகுதியில் 50வது லட்சம் பயனாளியை முதல்வர் நேரில் சென்று சந்தித்து மருத்துவ சேவை மற்றும் அதிநவீன 188 புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர்  தொடங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின்படி விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் 18,580 பேருடை உயிர் காக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் 16.97 கோடி ரூபாய் செலவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர்கள் மீட்கப்பட்டுள்ள தாகவும் மேலும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவமனைகள் எண்ணிக்கை 609 லிருந்து 640 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்து இருப்பதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் படிப்படியாக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் இன்று முதல் மழலையர் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஐ சி எம் ஆர் வழிகாட்டுதல் படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!