இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்.. அமைச்சர் நம்பிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2021, 11:30 AM IST
Highlights

சென்னையில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா இறப்பு சதவிகிதம் குறையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

சென்னையில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா இறப்பு சதவிகிதம் குறையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையம்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, இந்த சிகிச்சை மையத்தில் 104 படுக்கைகள் இருப்பதாகவும்,8 மருத்துவர்கள் 14 செவிலியர்கள் பணிபுரிவார்கள் என்றும் தெரிவித்தார். சென்னையில் இரண்டாவது அலை குறைந்து வருவதாகவும், மூன்றாவது அலையின் பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். கொரோனா குறித்த தகவல்கள் வெளிப்படையாக வழங்கப்படுவதாகவும், இன்னும் ஒரிரு நாட்களில் சென்னையில் இறப்பு சதவிகிதம் குறையும் என்றும் தெரிவித்தார். 

நீரிழிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்ட் மருந்து வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாகவும், இதற்கான தடுப்பு மருந்து அரசிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து மயானங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மாநகராட்சி கண்காணித்து வருவதாகவும், மின் மயானங்களில் ஏறியுட்டும் இயந்திரங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

click me!