கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்...!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 7:34 PM IST
Highlights

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கல் குறைந்து வந்த நிலையில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா  புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் முன்பே அறிவித்துள்ளவாறு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக RT-PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுதல் ஆகியவை தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. சில மாநிலங்களில் போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசு தனியாக செயல்படுத்தக்கூடாது.

வருகிற ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!