அதிமுக முன்னாள் எம்.பி.க்கு கொரோனா..? அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published May 8, 2020, 10:31 AM IST
Highlights

சென்னையில் முன்னாள் அதிமுக எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் முன்னாள் அதிமுக எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 5409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இதன் விரீயம் சற்றும் குறையவில்லை. முக்கியமாக சுகாதார பணியாளர்கள், போலீசார், மருத்துவர்கள், செவிலியர்கள்,  மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்,  அதிமுக மத்திய சென்னை முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார் இரு நாட்களுக்கு முன் பரிசோதனை நடத்தினார். அவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால், அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இல்லாததால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி  மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!