அடுத்த மாதம் கொரோனா 3வது அலை உருவாகியே தீரும்.. சிறுவர்களுக்கான மருத்துவமனைகளை தயார் செய்யுங்க.. எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2021, 1:00 PM IST
Highlights

ஆனாலும் உலகத்தில் இருந்து இன்னும் ஒழிக்க முடியாத நோயாக கொரோனா தொற்று பற்றி பரவி வருகிறது. முதல் அலை, இரண்டாவது எனயென ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் ஏற்படும் என இந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்)  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது

.

அடுத்த மாதம் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதானல்  இது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பரவிய கொரோனா இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. தற்போது உலகம் முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆனாலும் உலகத்தில் இருந்து இன்னும் ஒழிக்க முடியாத நோயாக கொரோனா தொற்று பற்றி பரவி வருகிறது. முதல் அலை, இரண்டாவது எனயென ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் ஏற்படும் என இந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்)  அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மூன்றாவது அறையின் போது குழந்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்கா விட்டால் 3வது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அது எச்சரித்துள்ளது. பல்வேறு நிபுணர்களுடன் நடத்தப்பட்டு ஆலோசனையின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

குறிப்பாக பிற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்றும், ஆசிரியர்கள், பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு என்று சிகிச்சை வழங்க கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் மருத்துவமனைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் பெற்றோர்கள் மருத்துமனையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலை இப்போது வரும் அப்போது வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், நிச்சயம் அடுத்தமாதம் வரும் என இந்திய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!