#BREAKING கொரோனா 2வது அலை கைமீறிவிட்டது.. மருத்துவ நிபுணர்களாலும் கணிக்க முடியவில்லை.. பகீர் கிளப்பிய அரசு.!

By vinoth kumarFirst Published Apr 15, 2021, 12:37 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் வழக்கமான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, வேறொரு வழக்கில் ஆஜராகியிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனை பார்த்து தலைமை நீதிபதி கொரோனா 2வது அலை வேமாக பரவி வருகிறது. ஆகையால், நீதிமன்றங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அறிவுரைகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து கேட்டார்.

அப்போது. பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2 அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 2 அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும், 2வது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது. எப்படி உருமாகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை. தமிழகத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும், 40 வயதானர்களுக்கும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் நீதிபதி கேள்விக்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணணை இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, நீதிபதி அதற்கு பின்பு உயர்நீதிமன்ற நிர்வாக முழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

click me!