கணவர் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார்.. வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.

Published : Apr 15, 2021, 12:16 PM IST
கணவர் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார்.. வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை.

சுருக்கம்

பிரபல திரைப்பட நடிகை ராதா தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா

பிரபல திரைப்பட நடிகை ராதா தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா (39). இவர் சென்னை எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அது தொடர்பான வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சர்சைகளில் இருந்து ஒதுங்கி இருந்த ராதா, தற்போது மீண்டும் காவல் நிலையத்தின் படியேறி உள்ளார். சென்னை எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ராதா அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கிடையில் தொடர்ந்து கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு நேற்று வசந்தராஜ் ராதாவை அடித்ததாகவும்  கூறப்படுகிறது. இதனையடுத்து ராதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் வசந்தராஜ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..