சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. நேற்று மட்டும் 1,124 வழக்குகள், 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம்

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2021, 12:31 PM IST
Highlights

சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1, 124 வழக்குகள் பதியப்பட்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1, 124 வழக்குகள் பதியப்பட்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு அதிரடியாக பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. திரையரங்கில் 50 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி,  அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

சென்னையிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  விடுமுறை நாட்களில் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  மாஸ்க் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் 200 ரூபாய் அபராதம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் அபராதம் என வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில்,  

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 5 ஆயிரத்து 998 வழக்குகள் பதியப்பட்டு இதுவரை மொத்தம் 11 லட்சத்து 99 ஆயிரத்து 600 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடந்தவர்கள் மீது நேற்று மட்டும் 5 வழக்குகள் பதியப்பட்டு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது மொத்தம் 91 வழக்குகள் பதியப்பட்டு 40 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!