தனியார் பள்ளிகள் கெடுபிடி காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2021, 12:25 PM IST
Highlights

இந்நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பலர் வாழ்வாதரம் இன்றித் தவிக்கின்றனர். இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் கெடுபிடி காட்டி வருகின்றன.

இந்நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
click me!