தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்...! ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு..!

By Selva KathirFirst Published Aug 7, 2021, 11:32 AM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான திட்டம் டெல்லியில் தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை விடுவிக்க மேலிடம் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தலைவர் பதவி ரேஸில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் பெயர் உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவர் பெயரையுமே ராகுல் காந்தி நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான திட்டம் டெல்லியில் தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை விடுவிக்க மேலிடம் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரசுக்காக பெரிய அளவில் சீட்டுகளை திமுகவிடம் இருந்து அழகிரியால் பெற முடியவில்லை என்று மேலிடம் நினைக்கிறது. மேலும் அவர் ஆக்டிவாக இல்லை என்கிற புகாரையும் காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால் ஆக்டிவான ஒருவரை தலைவராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு வார காலமாகவே டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவரை நியமிக்கலாம் என்று ஆலோசனை தொடங்கிய போது ஜோதிமணி பெயர் அடிபட்டது. ஆனால் கரூரில் உள்ள லோக்கல் காங்கிரஸ் பிரமுகர்களையே அவரால் சமாளிக்க முடியாது அவர் எப்படி தமிழக அளவில் நிர்வாகிகளை சமாளிப்பார் என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இதே போல் சில விஷயங்களில் ஜோதிமணி ஸ்ட்ரெய்ட் பார்வேடு என்பதால் தலைவர் பதவிக்கு சரிப்பட மாட்டார் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதே போல் கார்த்தி ப.சிதம்பரத்தை பொறுத்தவரை மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவரது தந்தை ராகுல் காந்திக்கு எதிராகவே அரசியல் செய்தவர். எனவே கார்த்தியை முக்கிய பதவியி அமர வைப்பது ஆபத்து என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளதாக சொல்கிறார்கள். எனவே கார்த்தி சிதம்பரம் பெயரும் ரேஸில் இல்லை என்கிறார்கள். அதே சமயம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் இருந்து 9 சீட்டுகளை பெற்றுக் கொடுத்த திருநாவுக்கரசருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

தவிரஅண்மையில் டெல்லி சென்ற கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். ஒரு முறை அல்ல இரண்டு முறை அவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் தமிழக காங்கிரஸ் நிலவரம் குறித்து நீண்ட நேரம் ராகுல் உரையாடியதாக சொல்கிறார்கள். மேலும் விஜய் வசந்தின் தந்தை வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு பல முறை முயற்சித்தும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே விஜய் வசந்தை அந்த பதவியில் நியமிக்கலாமா? என ராகுல் ஆலோசனை நடத்துவதாக சொல்கிறார்கள்.

அனுபவம் குறைவு என்றாலும் ஆக்டிவாக செயல்படகூடியவர் என்பதால் அவர் பெயரை ராகுல் பரிசீலித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் இறுதி முடிவு எடுக்க சில காலம் பிடிக்கும் என்று சொல்கிறார்கள்.

click me!