எடப்பாடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

Published : Jul 07, 2022, 04:53 PM IST
எடப்பாடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

சுருக்கம்

எடப்பாடி பழனிசானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பொதுக் குழுவுக்கு தடை கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பொதுக் குழுவுக்கு தடை கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதுத்தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: ஜூலை 11 நடைபெறும் பொதுக்குழுவும் செல்லாது.! தீர்மானமும் செல்லாது..! இபிஎஸ் அணியை அலறவிட்ட வைத்தியலிங்கம்

அவற்றில் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவர்களை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவைத் தலைவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்

அப்போது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கு விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரதான வழக்குகளின் விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!