கருணாநிதி இருந்தவரை நான் தான் No.1..! மறைவுக்குப் பின் கால் தூசி ஆகிவிட்டேன் வி.பி துரைசாமி வேதனை

By Ajmal KhanFirst Published Jul 7, 2022, 4:33 PM IST
Highlights

திமுக அமைச்சரவை பொறுத்தவரை டாக்டருக்கு சுற்றுலா துறையும், ஓட்டப்பந்தய வீரருக்கு சுகாதாரத்துறை வழங்கியுள்ளதாக  பாஜக துணை தலைவர் வி பி துரைசாமி விமர்சித்துள்ளார்.

ஓட்ட பந்தய வீரருக்கு சுகாதாரத்துறை
 
இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, பாஜக பட்டியலின அணி சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டனர் . அப்போது நிகழ்ச்சியில் பேசிய வி.பி.துரைசாமி,  இந்தியாவிற்கு மோடி கிடைத்துள்ளது போல் தமிழகத்திற்கு பொக்கிஷமாக அண்ணாமலை கிடைத்துள்ளதாக தெரிவித்தார். நமது சமூதாய மக்களை தூக்கி பிடிக்கும் அண்ணாமலையை  நாம் தூக்கி பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் அண்ணாமலைக்கு நிகரான அரசியல் தலைவர் யாருமில்லை என குறிப்பிட்டவர், அவருக்கு இணையான இளம் வயது அரசியல்வாதிகள் இல்லையெனவும் தெரிவித்தார்.  தயவு செய்து அண்ணாமலையை இறுக பிடித்து கொள்ளுங்கள் என கூறினார்.  ஒழுக்கம், அறிவு, ஆற்றல் நிறைந்த தலைவர் அண்ணாமலையென தெரிவித்தவர், பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பாடுபடுவதாகவும் அவரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். திமுகவில் சமூக நீதி பேச்சில் மட்டுமே உள்ளதாகவும் பட்டியல் இன மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு என திமுகவில் பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என சில துறைகளை மட்டுமே வழங்க வேண்டும் என பட்டியலிட்டு வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.டாக்டருக்கு சுற்றுலா துறையும், ஓட்டப்பந்தய வீரருக்கு சுகாதாரத்துறை வழங்கியுள்ளதாகவும் கூறினார். 

தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை

உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே போல் MLAக்கள் வெளியே வருவார்கள்- வேலூர் இப்ராஹிம்

 திமுகவில் கால் தூசி அகிவிட்டேன்

 பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். என் தந்தையும் தாயும் கூடியதால் நான் இந்த சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை தவிர நான் வேறு என்ன பாவம் செய்தேன். எனக்கு அறிவு இல்லை, தகுதியில்லை என கூறுகிறார்கள் வேறு என்ன பாவம் செய்து விட்டேன் நான் பட்டியலின சமூதாயத்தில் பிறந்து விட்டதால் எனக்கு அறிவில்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.  திமுகவில் நான் நிறைய பார்த்து உள்ளேன் கலைஞர் உயிருடன் இருக்கிற வரை அங்கு துணை பொது செயலாளர் வி.பி துரைசாமி நம்பர் ஒன் என்ற இடத்தில் இருந்தேன். கலைஞர் மகராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது. அவர் மறைவுக்கு பின் கால் தூசுக்கு என்னை தள்ளிவிட்டதாக வேதனையோடு தெரிவித்தார். இதற்காக நான் சுப்ரீம் கோர்டிலா வழக்கு தொடர முடியும் எனவும் தெரிவித்தார்.  தமிழகத்திற்கு பொக்கிஷமாக கிடைத்த தலைவர் அண்ணாமலை அவரை நாம் முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

ஜூலை 11 நடைபெறும் பொதுக்குழுவும் செல்லாது.! தீர்மானமும் செல்லாது..! இபிஎஸ் அணியை அலறவிட்ட வைத்தியலிங்கம்


 

click me!