ஜூலை 11 நடைபெறும் பொதுக்குழுவும் செல்லாது.! தீர்மானமும் செல்லாது..! இபிஎஸ் அணியை அலறவிட்ட வைத்தியலிங்கம்

By Ajmal KhanFirst Published Jul 7, 2022, 2:58 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டமும் செல்லாது, அங்கு நிறைவேற்றப்பட உள்ள தீர்மானமும் செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

பொதுக்குழுவிற்கு எப்படி தடை விதிக்க முடியும்..?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். உச்ச நீதிமன்றமோ உட்கட்சி பிரச்சனையில் தலையிட முடியாது என கூறிவிட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்குகள் இபிஎஸ்க்கு சாதகமாகவே முடிவடைந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி நடத்தாமல் தடுக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது உச்சநீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என கூறிவிட்ட நிலையில், நான் எப்படி அதற்கு தடை விதிக்க முடியும் ? என  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேள்வி எழுப்பினார்.

ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்

உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே போல் MLAக்கள் வெளியே வருவார்கள்- வேலூர் இப்ராஹிம்

தீர்மானங்கள் செல்லாது- வைத்தியலிங்கம்
 
இதனிடையே அதிமுகவில் உட்கட்சி விவகாரம் குறித்து  ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க வைத்திலிங்கம் இன்று சென்னை உயர்நீதிமன்றம் எப்படி தீர்ப்பளிக்கிறதோ அதை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்தார். சட்ட விதிப்படி 11ம் தேதி பொதுக்குழு செயற்குழு செல்லாதுயென்றும் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என தெரிவித்தார். செயற்குழு, பொதுக்குழு நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நீதிமன்றம் மற்றும்  தேர்தல் ஆணையத்திற்கும் செல்வோம் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை

 

click me!