கே.எஸ்.அழகிரி தனது கட்சியை ICU-வில் வைத்து உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியை ஒட்டவைக்க பாஜக Feviquick வாங்கித்தர தயாராக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பாட புத்தகத்தில் இரட்டை மலை சீனிவாசன்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவ்சேனா அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது செல்வாக்கின் மூலம் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டி பாஜக துணையோடு மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் இருந்தும் திமுக அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக பாஜகவினரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், சென்னை கிண்டியில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அண்ணாமலை, பள்ளி மாணவர்கள் படிக்கும் வகையில் இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்றும் பாடப்புத்தகங்களை திருத்தியமைக்கும் போது இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாறை இடம்பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்
தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே..?
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஊடகங்கள் தான் கண்டறிய வேண்டும் எனவும், ஏக்நாத் ஷிண்டேவாக ஒருவர் உருவாவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே என்பவர் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை ; வேறு பெயரிலும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே வெளியேறியதற்கும் பாஜகவுக்கு சம்மந்தம் கிடையாது என்று கூறியவர், மக்களின் ஆதரவைப் பெற்று, அன்பைப் பெற்று, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருவதே பாஜகவின் விருப்பம் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் விரும்பாது எனவும் கூறினார். பாரத ரத்னா கிடைக்கவேண்டிய நபர் இளையராஜா என்றும் அவருக்கு எம்.பி., பதவியை குடியரசுத்தலைவர் வழங்கியுள்ளார் எனவும் இளையராஜாவுக்கு எம்.பி., பதவி கிடைத்தது தனக்கு கிடைத்த பதவி என்று தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருவதாகவும் மிகவும் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தருணம் இது என்று கூறினார்.
ஐசியூவில் காங்கிரஸ்- அண்ணாமலை
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதும் சரி, தமிழ்நாட்டு அரசை புகழ்ந்ததும் சரி அது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து தான் என்றும் இதில் அரசியல் இல்லை தனது பார்வையை இளையராஜா வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியை ICU-வில் வைத்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியில் பல பிரிவுகளாக பிரிந்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை ஒட்டவைக்க பாஜக Feviquick வாங்கித்தர தயாராக உள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்