ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு சதி.. நேரம் வரும்போது கூறுவேன்.. முன்னாள் தலைமைச் செயலர் பரபரப்பு தகவல்..!

Published : Oct 17, 2020, 11:03 AM IST
ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு சதி.. நேரம் வரும்போது கூறுவேன்.. முன்னாள் தலைமைச் செயலர் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ சதி நடந்திருக்கிறது என முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ சதி நடந்திருக்கிறது என முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு  மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது?  யார் என்ன நினைத்தார்கள்?  என்று தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால், அதில் ஒரு சதி நடந்திருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..