மோடி அரசின் செல்லப் பிள்ளையாக அதிமுக அரசு..?? போகும் இடமெல்லாம் எடப்பாடி அரசை புகழும் மத்திய அமைச்சர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2020, 10:48 AM IST
Highlights

தமிழக அரசின் சிறந்த முயற்சியால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது என்ற அவர்,  மற்ற மாநிலங்களும்  தமிழகத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியினாலேயே இந்த நிலை எட்டப்பட்டுள்ளது என்றும், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். டெல்லியில் இருந்தவாறே காணொளி வாயிலாக ஆந்திர மாநிலத்திற்கான சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார், 

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  ஆண்டுதோறும் நாட்டில் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறினார். மக்களின் உயிரைக் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அவர். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்க நடவடிக்கை  எனடுக்க வேண்டும் என்றார். சாலை விபத்துக்களே இல்லை என்ற இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் அரசு செய்யும் என்பதை தனிப்பட்ட முறையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.மேலும், தமிழகத்தில் பெருமளவு சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் சிறந்த முயற்சியால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது என்ற அவர்,  மற்ற மாநிலங்களும்  தமிழகத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். எற்கனவே கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழகமே கொரோனா தடுப்பில் சிறந்து விளங்குகிறது என பாரத பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மாநாட்டில்  முதலமைச்சர் எடப்பாடியாரை பாராட்டிய நிலையில், தற்போது நிதின் கட்கரி சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தை பிற மாநிலங்கள் முன்னுதாரணமாக எடுத்துச் செயல்பட வேண்டும என கூறியிருப்பது. அதிமுக அரசின் மீது மத்திய பாஜக அரசுக்கு உள்ள நன்மதிப்பையும், அக்கறையையுமேகாட்டுவதாக உள்ளது.  
 

click me!