ஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது.!! பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.!!

Published : May 24, 2020, 11:27 PM IST
ஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது.!!  பாஜக  மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.!!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச1000 பஸ்களை அனுப்புவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.ஆனால் ராஜஸ்தானிலிருந்து மாணவர்களை அனுப்பியதற்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச1000 பஸ்களை அனுப்புவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.ஆனால் ராஜஸ்தானிலிருந்து மாணவர்களை அனுப்பியதற்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக பாஜக மற்றும் மாயாவதி  கண்டனம் தெரிவித்துள்ளனர்..

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாக கால்நடையாக சைக்கிள் மூலமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரம் பேருந்துகளை இலவசமாக இயக்குவதாக காங்கிரஸ் அனுமதி கேட்டிருந்தது.அனுமதி வழங்க காலதாமதம் ஆனவுடன் பாஜக சின்னம் கூட பஸ்சில் போட்டுக்கொள்ளுங்கள் கெஞ்சினார் பிரியங்கா.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் அரசு தனது மாநிலத்தில் படித்து வந்த 12 ஆயிரம் உத்தர பிரதேச மாணவர்களை சிறப்பு பேருந்துகள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு எரிபொருள் கட்டணமாக 19 லட்ச ரூபாய் உ.பி அரசு அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் கேட்டிருந்தது. உ.பி அரசும் காசோலையாக அந்த தொகையை செலுத்தியுள்ளது. அதற்கு பிறகு மீண்டும் 36 லட்ச ரூபாய் ராஜஸ்தான் அரசு கேட்டுள்ளது. அதையும் உ.பி அரசு செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உ.பி பாஜக பொதுச்செயலாளர் விஜய் பகதூர் பேச்யபோது..."ஆயிரம் பஸ்களை அனுப்பி மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸின் உண்மை முகம் ராஜஸ்தான் மூலமாக வெளிப்பட்டு விட்டது. அத்துடன் ஆயிரம் பஸ்களை இயக்குவதாக ஆட்டோ, மினி லாரி வண்டி எண்களை அளித்தது ஏன்? என பிரியங்கா காந்தி பதில் சொல்ல வேண்டும்" என கூறியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு