தலித்மக்களுக்கான மாநில ஆணையம்.!அறிவாலயம் பஞ்சமி நிலம் புகார்.. திருமாவுக்கு துணிச்சல் இருக்கா?ஹெச்.ராஜா நக்கல்

By T BalamurukanFirst Published May 24, 2020, 10:19 PM IST
Highlights

பாஜக சாதி அரசியல் செய்வதாகவும் தலித் மக்களுக்கான மாநில ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? என்று முதல்வருக்கும் பாஜகவினருக்கும் கேள்வி எழுப்பியிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக ஹெச்.ராஜா..." தலித் மக்களுக்கான மாநில ஆணையம் தமிழகத்தில் அமைத்திட மாநில அரசை இன்றே கேட்டுக்கொள்கிறேன்.

 ஆனால், அதில், முதல் புகாராக முரசொலி பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்க திருமாவளவனுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஹெச். ராஜா... தலித்துக்களையும், திருமாவளவனையும் மீண்டும் மீண்டும் சீண்டிவருகிறார். காரைக்குடி தொகுதி எம்எல்ஏவாக ஹெச்.ராஜா யாரால் ஆனார் என்பதை வரலாறு மறந்து விடாது. கலைஞர் அன்று தா.கிருஷ்ணனிடம்.." மக்கள் செல்வாக்கு இல்லாத ராஜா தோற்றுப்போனார் என்கிற செய்தி வரக்கூடாது வெற்றி பெற்றார் என்ற செய்தியோடு அவரை அறிவாலயம் அழைத்து வரவேண்டும் என்று கடுமையாக உத்தரவு போட்டார்.

அதனால் தான் ராஜா இன்று முன்னாள் எம்எல்ஏ என்கிற அடைமொழியோடு வலம் வருகிறார். எம்பி ஆவதற்கு எத்தனை முறை குன்றக்குடிக்கு காவடியெடுத்தாலும் அவரை மக்கள் எம்பியாக்க தயாராக இல்லை. மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாதவர் வாய்சவடால் விட்டுக்கொண்டே எல்லோரையும் எல்லை மீறி பேசிவருகிறார்.இப்படி மக்கள் மத்தியில் செல்லாக்காசான ராஜா... தலித் மக்களின் தலைவர் மக்கள் பிரதிநிதியான எங்கள் தலைவர் திருமாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள் திருமாவின் ஆதரவாளர்கள்.
 
click me!