மோடி சொல்லே மந்திரம்…. பிரதமரின் பேச்சை கிண்டல் செய்து பணக்காரரான காங்கிரஸ் நிர்வாகி….. எப்படி தெரியுமா ?

First Published Jun 21, 2018, 1:50 PM IST
Highlights
congress youth become a rich man he sold Bakoda


பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செயவதற்காக பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தற்போது 35 கடைகளுக்கு பக்கோடா சப்ளை செய்யும் தொழிலதிபராக மாறியுள்ளார். இந்த இளைஞர் நாள்தோறும் 600 கிலோ பகோடாக்களை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.குஜராத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது.

வேலையில்லையே என்று இளைஞர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், பக்கோடா கடை வைத்தால் நாய்தோறும் குறைந்த பட்டசம் 200 ரூபாயாவது சம்பாதிக்கலாம் என்றும் அதன் மூலம் தொழிலதிபர் ஆகிவிட முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சிக்கு உன்றுக்கு பேட்டி அளித்தார்.

தங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி  பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று மோடி சொன்னது இதுதானா? என கேள்வி எழுப்பிய இளைஞர்கள்  அவரை கடுமையாக கிண்டல் செய்தனர். மேலும் மோடி பங்கேற்ற கூட்டங்களில்  காங்கிரஸ் கட்சியினர் பக்கோடாக்களை விற்பனை செய்து அவரது  பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்

.

இந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதாரைவைச் சேர்ந்தவர் நாராயண் பாய் ராஜ்புத் என்ற காங்கிரஸ் நிர்வாகி ,பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு அவரைக் கிண்டல் செய்யும் விதமாகப் பக்கோடா கடை வைத்தார், ஆனால், அவரே எதிர்பார்க்காமல் அவருக்கு நாள்தோறும் ரூ.200 முதல் ரூ.400 வரை லாபம் கிடைத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து  சொந்தமாகப் பக்கோடா கடையை நடத்தத் தொடங்கி, அந்த நகரில்  35 கடைகளுக்கு இவரின் பக்கோடாக்களை விற்பனை செய்ய உரிமம் அளித்திருக்கிறார். நாள்தோறும் 500 முதல் 600 கிலோ பக்கோடாக்களை விற்பனை செய்கிறார்.

இந்த பக்கோடா கடை மூலம் நல்ல லாபம் கிடைத்தாலும், நான் பாஜகவில் சேரமாட்டேன் என்றும்  , சாகும்வரை காங்கிரஸ் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன் என்றும் நாராயண் பாய் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

click me!