கரெக்ட்டுதான்..! பா.ம.க.வுக்கு சூடு சொரணை இல்லவே இல்லைதான்... அடித்து துவைத்து காயப்போட்ட அன்புமணியின் மச்சான்..!

By Vishnu PriyaFirst Published Feb 22, 2019, 6:06 PM IST
Highlights

பா.ம.க.வை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டது சரிதான். இவர்களுக்கு சூடு, சொரணை இல்லவே இல்லைதான். அப்படி இருந்திருந்தால் 24 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. அரசாங்கத்தைப் பார்த்து ‘மானங்கெட்ட அரசாங்கம்.’ என்று திட்டியும் விட்டு இப்போது இப்படி கைகோர்ப்பார்களா?.” என்று வெச்சு வெளுத்தெடுத்திருக்கிறார். மிக மிக நெருங்கிய உறவினராய் இருந்தும் கூட விஷ்ணுபிரசாத்.

அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யோடு கூட்டு வெச்சாலும் வெச்சார்! ராமதாஸையும், அன்புமணியையும் இப்படித்தான் என்று இல்லாமல் போட்டு வெளுக்கிறார்கள் ஆளாளுக்கு. ஏதோ ஒரு எதிர்கட்சி அரசியல் தலைவர் திட்டினாலும் கூட பரவாயில்லை. ஆனால் சொந்தபந்தத்திலேயே அதுவும், பொண்ணெடுத்த வீட்டுக்காரங்களே திட்டுறதென்பது கொடுமைதானே. 

ராமதாஸ் தன் மகனுக்கு பெண் எடுத்த குடும்ப எதுவென்று உங்களுக்கு தெரியும்தானே. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகள் செளமியாவைதான் அன்புமணி திருமணம் செய்திருக்கிறார். செளமியாவின் சகோதரரான மாஜி எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். 

பா.ம.க.வை எப்படியாவது தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும், செளமியாவின் மாமனாரையும், கணவரையும் அறிவாலயத்தில் அழைத்து வந்து அறிவாலயத்தில் கூட்டணி பேச உட்கார வைக்க வேண்டும்! என்று பெரும்பாடுபட்டார் விஷ்ணு. ஆனால் எல்லாம் வீணாக போய்விட்டது. இப்போது இதுகுறித்து வெடித்துப் பேசியிருக்கும் விஷ்ணுபிரசாத் “உறவு முறை என்பது வேறு. அரசியல் என்பது வேறு. உறவுக்கான மரியாதையை கொடுக்க நான் தவறியதேயில்லை. ஆனால் அரசியல்னு வர்றப்ப எதிரணியில் இருக்கிறவங்களை எப்படி டீல் பண்ணனுமோ அப்படித்தான் பண்ணுவேன்.

 அன்புமணி அஞ்சு வருஷமா எம்.பி.யா இருக்கார். பி.ஜே.பி. கூட்டணியில ஜெயிச்சு வந்திருந்தாலும் அவரால மத்திய அமைச்சராக 
 முடியலை. இதனால மோடி அரசை எதிர்க்கணும்னு இத்தனை நாளா பேசிட்டு இப்ப திடீர்ன்னு கூட்டணி போடுறது என்ன அர்த்தம்? அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி என்பது ஒரு முரண்பாடான கூட்டணிதான். அங்கே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததுன்னு சொல்றதை விட, பேரம் நடந்துச்சுன்னுதான் சொல்லணும். அதுதான் சரியான கருத்தும் கூட. சுயலனுக்காக சமுதாய மக்களை மொத்தமாக அடகு வைத்திருப்பதால், இந்த கூட்டணியை அந்த வன்னியர்கள் என்னைக்கும் ஏத்துக்கவே மாட்டாங்க.

பா.ம.க.வை பார்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டது சரிதான். இவர்களுக்கு சூடு, சொரணை இல்லவே இல்லைதான். அப்படி இருந்திருந்தால் 24 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. அரசாங்கத்தைப் பார்த்து ‘மானங்கெட்ட அரசாங்கம்.’ என்று திட்டியும் விட்டு இப்போது இப்படி கைகோர்ப்பார்களா?.” என்று வெச்சு வெளுத்தெடுத்திருக்கிறார். மிக மிக நெருங்கிய உறவினராய் இருந்தும் கூட விஷ்ணுபிரசாத் இப்படி பேசியிருப்பதை அன்புமணியால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லையாம். அவர் தன் மனைவி செளமியாவிடமும், மாமனார் கிருஷ்ணசாமியிடமும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறாராம் கோபத்தை. என்னா அரசியல் போங்க!

click me!