'மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி'... அன்புமணியை கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!

Published : Feb 22, 2019, 05:49 PM IST
'மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி'...  அன்புமணியை கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

மக்களவை தேர்தலுக்காக 'மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி' என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விளம்பரம் வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 

மக்களவை தேர்தலுக்காக 'மாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி' என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விளம்பரம் வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் பாமக கூட்டணி சேர்ந்ததில் இருந்தே கடுமையாக சாடி வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் மீண்டும் பாமகவை கடுமையாக விமர்சித்துப்ம் பேசுகையில், ‘’திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்க மாட்டோம் என சொன்னார்கள். நல்ல வேளை நம்மிடத்தில் அவர்கள் கூட்டு வைக்கவில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அதிமுகவோடு அவர்கள் கூட்டணி வைத்திருக்கிற காரணத்தால் அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை நாட்டுக்கு வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று மூன்று வாசகம் போட்டார்கள். அது அப்பொழுது... இப்போதுபொழுது இந்தத் தேர்தலில் மாற்றிப்போட வேண்டும். எப்படி என்றால் 'மாற்றம், ஏமாற்றம் சூட்கேஸ் மணி' என்று மாற்றி விளம்பரப்படுத்த வேண்டும்.

ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக ஒரு தேச துரோக கூட்டணியாக, மக்கள் விரோத கூட்டணியாக அது இன்றைக்கு அமைந்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி இல்லை இது 'பண நலக் கூட்டணி’’ என அவர் விமர்சித்தார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!