அம்மாவின் துரோகிகளே..! இதெல்லாம் அடுக்குமா...? பொது மேடையில் அமைச்சரை அலறவைத்த ஆளுங்கட்சி எம்.பி.

By Vishnu PriyaFirst Published Feb 22, 2019, 5:01 PM IST
Highlights

இப்போதெல்லாம் தமிழக அமைச்சர்களுக்கு பஞ்சாயத்துகளும், பிரச்னைகளும், விமர்சனங்களும் எதிர்கட்சியினர் மூலமாக வருவதில்லை, மிக நேரடியாக சொந்தக் கட்சியினர் மூலமாகவேதான் வருகிறது. இதற்கு செம்ம உதாரணம்தான் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூராருக்கு நடந்த அவமரியாதை.

இப்போதெல்லாம் தமிழக அமைச்சர்களுக்கு பஞ்சாயத்துகளும், பிரச்னைகளும், விமர்சனங்களும் எதிர்கட்சியினர் மூலமாக வருவதில்லை, மிக நேரடியாக சொந்தக் கட்சியினர் மூலமாகவேதான் வருகிறது. இதற்கு செம்ம உதாரணம்தான் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூராருக்கு நடந்த அவமரியாதை. 

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடியும் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஐந்து பர்சன்டேஜ் கூட உருப்படியாக செய்யப்படாத இந்த சிட்டியை ஸ்மார்ட் சிட்டியின் திட்டத்தில் சேர்த்து என்னவாகப் போகிறது? அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்க ஏதுவாகப் போகிறது, அவ்வளவே! என்று துவக்கத்திலேயே விமர்சனம் எழுந்தது. 

இந்த நிலையில், சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி செயல்பாட்டு பணிகள் ஆரம்பமாகுவதற்கான துவக்க விழா தூத்துக்குடி நகரில் நடந்திருக்கிறது. அப்போது அதில் பேசிய அத்தொகுதியின் அ.தி.மு.க. எம்.பி.யான நட்டர்ஜி திடீரென ஆவேசம் கொண்டவராக...“கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் அம்மா என்ன அறிவித்தார்?...’தூத்துக்குடி நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மீன்வளக்கல்லூரி அருகில் இடமும் தேர்வானது. அம்மா அறிவித்த அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். மக்களும் எதிர்பார்த்து எதிர்பார்த்து நொந்துவிட்டார்கள்.

 

சரி இத்தனை வருஷம் கழித்து, இந்த ஸ்மார்ட் சிட்டி பிராஜெக்டில் நிதி வந்ததும் அந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உருவாக்குவார்கள் என்று நம்பினோம். ஆனால் பழைய பேருந்து நிலையத்தையே இந்த திட்டத்தில் புதுப்பிக்க முடிவு செய்துள்ளீர்கள். இதற்கு அடிக்கல் வேறு நாட்டுகிறீர்கள். இதெல்லாம் அம்மாவுக்கு செய்யும் துரோகமில்லையா! இதெல்லாம் அடுக்குமா? அம்மா ஆசைப்பட்டதை, மக்களுக்கு கொடுக்க நினைப்பதை  மறந்த நீங்கள் அம்மாவின் துரோகிகள்தானே!” என்று பொளக்க துவங்க, மேடையிலிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவோ அதிர்ச்சியில் சிலையாகிவிட்டார். 
 
அ.தி.மு.க.வினர் அத்தனை பேரும் தாறுமாறாக கொதித்துவிட்டனர். காரணம், நட்டர்ஜி பேசியது அ.தி.மு.க.வின் கட்சி ஆலோசனை மேடையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. இதுவோ பொது நிகழ்ச்சி மேடை அதுவும் எதிர்கட்சியான தி.மு.க.வின் பெண் எம்.எல்.ஏ. கீதா ஜீவனும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இப்படியான பொது மேடையில் உட்கட்சி முக்கியஸ்தர்களை இப்படி எம்.பி. பேசலாமா? என்பதுதான் அவர்களின் கோபம். 

’தமிழகத்திலேயே மிக மிக மோசமான, செயல்பாடற்ற, மக்கள் நலன் காக்காத எம்.பி.ன்னு பெயரெடுத்தவர் இவரு. தலைமைக்கு இவரை பிடிக்கவேயில்லை. அதனால சீட் நிச்சயம் கிடைக்காது. அந்த வெறுப்புலதான் இப்படி அமைச்சர்கள் இருந்த கூட்டத்தில், எதிர்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தாண்டவமாடி தன்னை நல்லவனா காட்ட முயற்சி பண்ணியிருக்கார்!’ என்று நீண்ட விளக்கம் தருகிறார்கள் அவர்கள்.

 

ஆனால் எம்.பி.யோ “மக்கள் பிரதிநிதி நான். மக்களோட  குமுறலைத்தான் பிரதிபலிச்சேன். நான் எம்.பி.யாக கடமையை செய்யலைன்னு குற்றம் சாட்டுறாங்க. வரும் நிதிகளை இப்படியெல்லாம் அவங்க இஷ்டத்துக்கு யூஸ் பண்ணினால் நானெப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்? என்னை அமைச்சரோ, மாவட்ட செயலாளரோ, அதிகாரிகளோ யாருமே மதிப்பதில்லை.” என்று புலம்பல் விளக்கம் கொடுத்திருக்கிறார். அண்ணாச்சி பாவம்தாம்லே! மக்களோ அத விட பாவம்லே!

click me!