அசிங்கமா பேசறதை நிறுத்தல… சீமானின் நாக்கை அறுப்பேன்…. கொந்தளிக்கும் காங்கிரஸ் பிரமுகர்

Published : Oct 11, 2021, 09:01 PM IST
அசிங்கமா பேசறதை நிறுத்தல… சீமானின் நாக்கை அறுப்பேன்…. கொந்தளிக்கும் காங்கிரஸ் பிரமுகர்

சுருக்கம்

காங்கிரஸ் தொண்டர்களை தொடர்ந்து ஆபாசமாக விமர்சிக்கும் சீமான் நாக்கினை அறுத்துவிடுவேன் என்று வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: காங்கிரஸ் தொண்டர்களை தொடர்ந்து ஆபாசமாக விமர்சிக்கும் சீமான் நாக்கினை அறுத்துவிடுவேன் என்று வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் சம்பவத்தில் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பின்னர் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் கூறியதாவது:

காங்கிரஸ்காரர்களை பற்றி சீமான் தொடர்ந்து அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் வடசென்னைக்கு வந்தால் வெட்டுவேன், அரிவாளை தயாராக வைத்துள்ளேன், எந்நேரம் வந்தாலும் வெட்டுவேன்.

இதோடு காங்கிரஸ்காரர்களை இழிவாக பேசுபவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமானை எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் விடமாட்டார்கள் என்று கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!