ஆட்சியை கவிழ்ப்பதில் காட்டும் அக்கறையை, நாட்டின் பொருளாதாரத்தில் காட்டுங்கள்.!! மோடியை பங்கம் செய்த ராகுல்...

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2020, 3:05 PM IST
Highlights

தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில்  நீங்கள் மும்முரமாக இருந்தபோது உலகளாவிய எண்ணெய் விலையில் 35 சதவீத சரிவை நீங்கள் கவனிக்கவில்லை.

காங்கிரஸ் அரசை கவிழ்க்க தீவிரம் காட்டும் மோடி கச்சா எண்ணெய் விலை சரிவை கவனிக்கவில்லை என ராகுல் காந்தி பிரதமர் மோடியை  கடுமையாக சாடியுள்ளார்.   மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்காட்சியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான  ஜோதிராதித்யா சிந்தியாவுடன்  இணைந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மோடி, அமித் ஷாவை சந்தித்துள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச அரசியலில் நிலையற்ற தன்மை நிலவிவருகிறது.   இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,   காங்கிரஸ் அரசை கவிழ்க்க மும்முரமாக இருக்கும் பிரதமர் மோடி கச்சா எண்ணெய் விலை சரிவை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லையே  என குற்றம்சாட்டியுள்ளார். 

 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு  உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் டீசல்  விலை வெகுவாக உயர்ந்துள்ளது .  இதற்கு கொரோனா வைரஸ் தாக்குதலும் பெரிய காரணமாக கூறப்படுகிறது .  அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு  அறிவுறுத்தியது ,  ஆனால் ரஷ்யா அதற்கு மறுப்பு  தெரிவித்தது .  இதனால் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் எண்ணெய் வழங்கப்படும் என கூறியது .  

இப்படி பல்வேறு உரசல் போக்குகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் பயன்பாடு வெகுவாக குறைந்து வருவதாலும்,  கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்நிலையில்  கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்தாலும் ,  பெட்ரோல்-டீசல் விலை குறைவில்லை .  இந்நிலையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி  குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி ,  

தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில்  நீங்கள் மும்முரமாக இருந்தபோது உலகளாவிய எண்ணெய் விலையில் 35 சதவீத சரிவை நீங்கள் கவனிக்கவில்லை.  இந்தியர்கள் நலனுக்காக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 60 க்கு கிழ் உங்களால் கொண்டுவர முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.  பெட்ரோல் விலை குறைப்பதால் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று பதிவிட்டுள்ளார் .

 

 

click me!