வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப காங்கிரஸ் 1கோடி.!! கே.எஸ் அழகிரி அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 12:24 AM IST
Highlights

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
 

T.Balamurukan

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் முடங்கி நொறுங்கி போய் கிடக்கிறது. திடீரென போடப்பட்ட ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். வாடகை கொடுக்க முடியாமலும்,உணவு கிடைக்காமலும் ரெம்பவே கஷ்டப்பட்டவர்கள், இதற்கு மேல் இங்கே இருந்தால் உயிர் போய் விடும் என்று உயிருக்கு பயந்தவர்கள் கால்நடையாக தங்களது உடமைகளை தூக்கிக் கொண்டு கால்நடையாகவே பல நூறு கி.மீ தூரம் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் சிலர் மாரடைப்பால் மரணம் கூட அடைந்தார்கள்.


இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு போக மத்திய அரசு ரயில் சேவை செய்தது.அதற்கு பட்டினியில்,கையில் பணமில்லாத தொழிலாளிகளிடம் ரயில்கட்டணம் வாங்கியிருக்கிறது ரயில்வே துறை. உள்நாட்டில் அகதிகளாகிப் போனவர்களிடம் ஒர் அரசாங்கம் இப்படி நடந்து கொண்டது கேவலமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா,ராகுல்,பிரியங்கா போன்றவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

 இந்த நிலையில்,தான் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

click me!