"நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்கு 100கோடி.! இந்திய தொழிலாளிகள் சொந்த ஊர்செல்ல ரயில் கட்டணம்.!பிரியங்கா காட்டம்!

By Thiraviaraj RMFirst Published May 4, 2020, 10:35 PM IST
Highlights

குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபரின் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட முடியும். ரயில்வே அமைச்சகம் 'பிரதமர் கேர்ஸ்' நிதிக்கு ரூ.151 கோடி நிதி அளிக்க முடியும்

T.Balamurukan

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.மும்பை தாராவில் தொழிலாளர்கள் கூடியதால் பரபரப்பு லேசான தடியடி வரைக்கும் சென்றது. 

இந்தநிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்திரும்ப மத்திய அரசு சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் கடும்  தொழிலாளர்களின் செலவை காங்கிரசே ஏற்கும்என்று சொன்னார்கள். 

 அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்த போது ரூ.100 கோடி செலவிட்ட மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செலவிட முடியாதா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில்..," குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபரின் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட முடியும். ரயில்வே அமைச்சகம் 'பிரதமர் கேர்ஸ்' நிதிக்கு ரூ.151 கோடி நிதி அளிக்க முடியும். அதேபோன்ற பங்களிப்பை வேதனையில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்கள் பக்கம் மத்திய அரசு ஏன் அளிக்கவில்லை. அவர்களையும் இலவசமாக ரயில்களில் சொந்த மாநிலம் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாதா?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து வருகிறீர்கள். ஆனால் உள்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறீர்கள். தேசத்தைக் கட்டமைப்பவர்கள் தொழிலாளர்கள். ஆனால், அவர்களோ இங்கேயும், அங்கேயும் தடுமாற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலம் அழைத்துச் செல்லும் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்த முடிவு செய்துள்ளது”  என்று பதிவிட்டுள்ளார்.

click me!