17 வயதிலேயே மலர்ந்த காதல்... பிரியங்கா காந்தி வீட்டில் டும்டும்..!

Published : Dec 30, 2025, 12:17 PM IST
Priyanka Gandhi

சுருக்கம்

ரெஹான் மற்றும் அவிவாவின் திருமண தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்தைப் பற்றி அவர்களது குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ராவின் வீட்டில் கல்யாண கச்சேரி கலைகட்ட ஆரம்பித்துள்ளன. பிரியங்கா காந்தி - தொழிலதிபர் ராபர்ட் வத்ராவின் மகன் ரெஹான் வத்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ரெஹான் சமீபத்தில் அவிவா பேக் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24 வயதான புகைப்படக் கலைஞரான ரெஹான், டெல்லியைச் சேர்ந்த தனது காதலி அவிவா பேக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு நிச்சயதார்த்தம் தனிப்பட்ட விழாவாக நடைபெற்றது. அவிவாவும் ஒரு புகைப்படக் கலைஞர்.

ரெஹான் மற்றும் அவிவாவின் திருமண தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்தைப் பற்றி அவர்களது குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஏழு வருட நட்புக்குப் பிறகு ரெஹான் வதேரா தனது காதலி அவிவா பெய்கிடம் காதலை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இரு குடும்பங்களும் நிச்சயதார்த்தத்தை அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.

பிரியங்கா காந்திக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரெஹானைத் தவிர, மிராயா வதேரா அவர்களின் மகள். பிரியங்காவின் மகனும் மகளும் 2024 நவம்பரில் வயநாடு மக்களவை இடைத்தேர்தலின் போது தங்கள் தாய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது வெளியுலகுக்கு வந்தனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு எலக்ட்ரிக் பஸ்ஸுக்கு தினமும் ரூ.15000.. மிளகாய் அரைக்கும் திமுக அரசு..! போக்குவரத்து துறையில் அநீதி..!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!