வாருங்கள்... ஒன்றாய்க் கூடுங்கள்... பிரிந்துபோன தலைவர்களை இணைக்க காங்கிரஸ் திட்டம்!

By Asianet TamilFirst Published May 30, 2019, 7:24 AM IST
Highlights

 கட்சித் தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சாராதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக இருப்பதாக தகவல் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரசிஸ் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கவும் ராகுல் யோசனை கூறியிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ள ராகுல் காந்தி, கட்சி மேலிடத்துக்கு யோசனையாகக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. 420 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் அளவுக்குக்கூட அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் அறிவித்துவிட்டார். அவருடைய முடிவை ஏற்க மறுத்துவிட்ட காரிய கமிட்டி, அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.


இது ஒரு புறம் இருக்க, கட்சித் தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச் சாராதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக இருப்பதாக தகவல் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் காங்கிரசிஸ் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கவும் ராகுல் யோசனை கூறியிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அஜித்சிங், சங்மா போன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியை காங்கிரஸ் கட்சி தொடங்கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றுகூடினால், அவர்களில் ஒருவருக்கோ அல்லது ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் போன்றவர்களுக்கு தலைவர் பதவியை வழங்கவும் ராகுல் காந்தி சோனியாவுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவித்திருப்பதாக என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

click me!