இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு நாங்களும் வர்ரோம்... திமுகவுக்கு ஆதரவாக கிளம்பிய காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Apr 24, 2019, 8:36 AM IST
Highlights

தேனி தொகுதி வேட்பாளர் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் தொகுதிகளில் நிலவும் வெற்றி வாய்ப்பு குறித்து ஸ்டாலினுடன் ஆலோசித்தார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தலுக்கு பிறகு திமுக வேட்பாளர்கள் ஸ்டாலினை சந்தித்து தங்களுடைய வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி நிலவரம் குறித்தும் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர்களும் சந்தித்து தங்கள் தொகுதி நிலவரம் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  
நேற்று முன்தினம் ஆரணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது ஆரணியில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு குறித்து ஸ்டாலினிடம் எடுத்துக்கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தேனி தொகுதி வேட்பாளர் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் தொகுதிகளில் நிலவும் வெற்றி வாய்ப்பு குறித்து ஸ்டாலினுடன் ஆலோசித்தார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையே மு.க. ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கோபண்ணா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்டாலினிடம் தெரிவித்ததாக திமுக, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!