தினகரன் சொன்ன ஒத்த வார்த்தை ! சிறையில் துள்ளிக் குதித்த சசிகலா !!

Published : Apr 23, 2019, 10:04 PM IST
தினகரன் சொன்ன ஒத்த வார்த்தை ! சிறையில் துள்ளிக் குதித்த சசிகலா !!

சுருக்கம்

அமமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  டி.டி.வி. தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறைக்கு சென்று சசிகலாவிடம் இன்று ஆசி பெற்றார். அப்போது தினகரன் சொன்ன ஒரு வார்த்தையில் மகிழ்ச்சி அடைந்த சசிகலா, இனி நமக்கு நல்ல காலம் தான் என்று வாழ்த்தியுள்ளார்.  

கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு அமமுகவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக அமமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவுக்குப் பதில் தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அமமுக தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டது. 

அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்தார். நேற்றே பெங்களூரு சென்ற தினகரன்  வழக்கமாக தங்கும் ஹோட்டலில் தங்கிவிட்டு இன்று நண்பகல் சிறைச் சாலைக்குச் சென்றார்.

தினகரனோடு அமமுகவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் அன்பழகன், ஜெயா டிவி சிஇஓ விவேக், ராஜராஜன், ஷகிலா, வெங்கடேசன்,சசிகலாவின் உதவியாளர் கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அப்போது தேர்தல் அனுபவம் எப்படி இருந்துச்சு. மக்கள் கிட்ட நமக்கு ஆதரவு எப்படி இருக்கு? ரிசல்ட் என்ன வரும்?’ என்றெல்லாம் தினகரனிடம் கேட்டிருக்கிறார் குறிப்பாக மோடி மீண்டும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளதா ? என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த தினகரன், மோடி திரும்ப ஆட்சிக்கு வர மாட்டார் என்று  உறுதியான கூறியுள்ளார். இந்த ஒரு வார்த்தையில்   மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சசிகலா, சரி இன்னும் உற்சாகத்துடன் பணியாற்றுங்கள் என வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அமமுக வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் 4 தொகுதி இடைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!