1999 - ல் ராமதாசு கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள்! வன்னி அரசு வெளியிட்ட அதிரவைக்கும் ஆதாரம்...

By sathish kFirst Published Apr 23, 2019, 8:06 PM IST
Highlights

கடந்த 1999 ஆம் ஆண்டு ராமதாசு கும்பல் நடத்திய வன்முறையை  அறிஞர் ரவிக்குமார் ‘வன்முறை ஜனநாயகம்’  என்னும் நூலில் அம்பலப்படுகிறார் என வன்முறை அரசியலின் தந்தை ராமதாசு என்ற தலைப்பிட்டு, போட்டோக்களை போட்டு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் விசிக வன்னி அரசு.

கடந்த 1999 ஆம் ஆண்டு ராமதாசு கும்பல் நடத்திய வன்முறையை  அறிஞர் ரவிக்குமார் ‘வன்முறை ஜனநாயகம்’  என்னும் நூலில் அம்பலப்படுகிறார் என வன்முறை அரசியலின் தந்தை ராமதாசு என்ற தலைப்பிட்டு, போட்டோக்களை போட்டு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் விசிக வன்னி அரசு. 

அதில், வன்முறை அரசியலின்
தந்தை ராமதாசு
 
ராமதாசு தலைமையிலான வன்முறைக்கும்பல் ஏதோ  இந்த 2019 ஆம் ஆண்டு  தேர்தலில் தான் ‘வூடு புகுந்து’வன்முறை செய்ததாக  சில ‘நடுநிலையாளர்கள்’ சொல்லித்திரிகின்றனர். 1999 ஆம் ஆண்டு முதன் முதலில் விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் பாதைக்கு அடியெடுத்து வைத்தது. அதற்கு முன்பு 10 ஆண்டுகாலமாக தேர்தல் புறக்கணிப்பு பாதையில் இருந்த விடுதலைச்சிறுத்தைகள் சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தேர்தலில் களமிறங்கியது. சிதம்பரம் தொகுதியில் 1999 ஆம் ஆண்டு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் போடியிட்டார். நமக்கான ஒரு தலைவனை கண்ட  சிதம்பரத்து மக்கள் அலையலையாக வாக்களித்தனர்.

அன்று தான் அந்த மக்கள் ‘நமக்கு நாமே’ வாக்களிக்கிறோம் என்ற நம்பிக்கை கொண்டனர். ஆனால், வழக்கம்போல ராமதாசு தலைமையிலான வன்முறைக்கும்பல் வாக்களிப்பதை தடுக்கும் விதமாக பூத்களை கைப்பற்றி தலித்துகளை விரட்டி அடித்தனர். வூடுகளை தீக்கிரையாக்கினர்.
படுகொலை செய்தனர்.

இத்தனையையும் மீறி தலைவர் திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்று மக்கள் தலைவரானார்.
தலித்துகள் வாக்களிப்பதையே தடுப்பது என்னவிதமான சனநாயகம்? இப்போது ராமதாஸ் ஒரு அறிக்கை வெட்கமே இல்லாமல் வெளியிடுகிறார்.


அதாவது, வாக்களிப்பது கட்டாய சட்டமாக்க வேண்டுமாம். இது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டுமாம்.
என்னே ஒரு சனநாயகத்தின் மீதான அக்கறை? ஒரு பக்கம் வாக்களிக்கும் மக்களை தடுத்து வன்முறை செய்துவிட்டு,
மறுபக்கம் வாக்களிப்பதை கட்டாயம் ஆக்கவேண்டுமாம்.

நாடக அரசியலின்- வன்முறை அரசியலின்  தந்தையாக ராமதாசு இருப்பதை காலம்  ஒவ்வொரு முறையும் சான்றளிக்கிறது.

ஆனாலும் நடுநிலையாளர்கள், சனநாயகவாதிகள்,  தமிழ்த்தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அந்த விஷக்கிருமியை எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.
- வன்னி அரசு 
23.4.2019

(கடந்த 1999 ஆம் ஆண்டு ராமதாசு கும்பல் நடத்திய வன்முறையை 
அறிஞர் ரவிக்குமார் 
‘வன்முறை ஜனநாயகம்’ 
என்னும் நூலில் அம்பலப்படுகிறார்)

click me!