அவருக்கு பெரிய புரட்சியாளர் என்று நினைப்பு... அண்ணாமலையை விளாசிய காங். எம்.பி.!!

By Narendran S  |  First Published Oct 4, 2022, 12:28 AM IST

தன்னை பெரிய புரட்சியாளர் என்று அண்ணாமலை நினைத்துக் கொள்வதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார். 


தன்னை பெரிய புரட்சியாளர் என்று அண்ணாமலை நினைத்துக் கொள்வதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரைக்கு வந்தபோது இரண்டு பொய்களை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

Tap to resize

Latest Videos

அதில் முதல் பொய் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இரண்டாவது பொய் விமான நிலையத்தில் விரிவாக்க பணி நின்று விட்டதாக கூறியிருக்கிறார். அது முழுவதும் பொய். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முரணாகவே பேசுகிறார். தப்பான தகவல்களை பேசி வருகிறார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

அவர் அரசியலில் தன்னை பெரிய புரட்சியாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் அவரை ஒரு நகை காமெடி நடிகராகவே பார்க்கிறார்கள். ராகுல் காந்தியின் பாத யாத்திரை பற்றி சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.

click me!