
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேரா. முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் மகனும் தந்தை பெரியாரின் குடும்ப உறுப்பினருமான திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் நேற்று பிற்பகல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க;- பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?
இந்நிலையில், பாரம்பரியமிக்க அரசியல் பின்னணி கொண்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு வந்தடைந்தார். இதனையடுத்து, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் வந்து திருமகன் ஈவேராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்து, கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே.என். நேரு ,மதிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க;- திமுகவில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது.. கொந்தளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்