உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைய காங்கிரஸ் குஷ்பூ பிரார்த்தனை.!

Published : Aug 02, 2020, 11:42 PM IST
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைய  காங்கிரஸ் குஷ்பூ பிரார்த்தனை.!

சுருக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூரணம் நலம் பெற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூரணம் நலம் பெற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் கொரோனா தொற்றால் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். இதனிடையே இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 அமித்ஷா பூரண கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில்..

"நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விரைவில் நலம் பெற்று வாருங்கள். விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்".

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?