DMK vs Congress : தமிழகத்தில் காங்கிரஸ் குறிவைத்த 21 தொகுதிகள்... எந்த எந்த தொகுதி தெரியுமா.? வெளியான பட்டியல்

By Ajmal Khan  |  First Published Jan 28, 2024, 2:41 PM IST

தமிழகத்தில் காங்கிரஸ் விருப்பமுள்ள 21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கவுள்ளது. இதில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குமாறு வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தொகுதி பங்கீடு- காங்கிரஸ் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில், இன்று காலை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழகத்தின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும்  தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தற்போது தொகுதி நிலவரம்,வெற்றி வாய்ப்பு, கூட்டணி பலம் குறித்து கேட்டறிந்தார். 

Latest Videos

21 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 ஆண்டுகள் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கம் அளித்து மீண்டும் அந்த தொகுதிகளை தங்களுக்கு பெற்றுத்தருமாறு முகுல் வாஸ்னிக்கிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு செல்கிறது.

அப்போது 21 தொகுதிகள் கொண்ட பட்டியலை வழங்கவுள்ளது. இந்த பட்டியலில் திருவள்ளூர் ,  கிருஷ்ணகிரி,  ஆரணி,  கரூர் , திருச்சி , சிவகங்கை , தேனி விருதுநகர் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளின் பட்டியலை வழங்கவுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை விட்டு கொடுக்குமா திமுக

இந்த பட்டியலில் உள்ள 21 தொகுதிகளில் 14 தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இந்த முறை கூடுதலாக காங்கிரஸ் கட்சி தொகுதிகளை ஒதுக்க கோரியுள்ளதால் திமுகவின் நிலை என்ன என விரைவில் தெரியவரும்

இதையும் படியுங்கள்

கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து காத்திருக்கும் அதிமுக... கண்டுகொள்ளதாக பாமக, தேமுதிக- அதிர்ச்சியில் எடப்பாடி

click me!