படுமோசமான நிலையில் காங்கிரஸ்... கண்டு கொள்ளாத சோனியா... கடும் அப்செட்டில் நிர்வாகிகள்..!

Published : Sep 29, 2021, 05:37 PM IST
படுமோசமான நிலையில் காங்கிரஸ்... கண்டு கொள்ளாத சோனியா... கடும் அப்செட்டில் நிர்வாகிகள்..!

சுருக்கம்

 காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேசியப் போராட்டத்தில் கட்சி திறம்படச் செயல்படவும் தொடர்ந்து விரும்புகிறோம்.

நாட்டில் தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் நிலையோ மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உடனடியாக உட்கட்சித் தேர்தல்  மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தி உள்ளார்.

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், வலிமையான தலைமை தேவை என வலியுறுத்தி சோனியா காந்திக்கு கட்சியின் 23 மூத்த தலைவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், ‘’கட்சியில் இருந்து எல்லாவற்றையும் பெற்றவர்கள் கட்சியை அழிக்க நினைக்கக் கூடாது. எங்களில் சிலர் கட்சியைக் உருவாக்குவதில் பங்களித்தவர்கள். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேசியப் போராட்டத்தில் கட்சி திறம்படச் செயல்படவும் தொடர்ந்து விரும்புகிறோம். நாங்கள் ஆக்கபூர்வமான மாற்றத்தின் முகவர்கள். காங்கிரஸ் கட்சியை தற்போதிருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக ஒரு தலைவர் தேவை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கட்சியை எப்படி வலுப்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்’’என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!