நாங்க ஞானவம்சம்... திமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆள்வது அதிகாரிகள் தானே... திருமாவளவன் கொந்தளிப்பு..!

Published : Sep 29, 2021, 05:13 PM IST
நாங்க ஞானவம்சம்... திமுக ஆட்சிக்கு வந்தாலும் ஆள்வது அதிகாரிகள் தானே... திருமாவளவன் கொந்தளிப்பு..!

சுருக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் ஞான வம்சம். எங்களுக்கு ஆயுதம் எங்கள் அறிவு மட்டுமே என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் ஞான வம்சம். எங்களுக்கு ஆயுதம் எங்கள் அறிவு மட்டுமே என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், ’’காவல்துறை எங்களை ஒரு கட்சியாகவே மதிக்கவில்லை. நாங்கள் democracyயை எதிர்க்கவில்லை, bureaucracyயை எதிர்கிறோம். அதிமுக, திமுக யார் வந்தாலும் ஆள்வது அதிகாரிகள்தான். சமூகநீதி சமூகங்களாய் ஒன்றிணைந்து சனாதனத்தை வீழ்த்துவோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை தலைவர் திருமாவளவன் சொன்னாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சாதிக்கட்சியாக கட்டம் கட்ட நினைக்கிறது சனாதனம். அத்தகைய, சனாதனத்திற்கு "சாதி இந்துக்களின் கட்சிகள்" துணைப்புரிகின்றன. திருமாவளவன் இல்லாமல் போகலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல் போகாது’’ என அவர் தெரிவித்தார். போலீஸாரை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்வதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது..! எடப்பாடி பழனிசாமி சூளுரை
எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்