ஆர்.எஸ் பாரதி பேசாததையா இவர் பேசிவிட்டார்..?? எச்.ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கம்.

Published : Sep 29, 2021, 05:10 PM IST
ஆர்.எஸ் பாரதி பேசாததையா இவர் பேசிவிட்டார்..?? எச்.ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கம்.

சுருக்கம்

ஆகவே அவருடைய அந்த விமர்சனத்தை தேசிய ஊடகவியலாளர் சங்கம் வரவேற்கிறது, திமுகவைச் சேர்ந்த அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் ஊடகங்களை ரெட்லைட் மீடியா என்று தகாத வார்த்தைகளால் பேசும் போது எந்த பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது . 

செய்தியாளர்கள் சந்திப்பில் எச். ராஜா அவர்களிட் விமர்சனத்தை வரவேற்பதாக தேசிய ஊடகவியலாளர்கள்  நலச்சங்கம் அறிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் ஊடகங்களை ரெட் லைட் மீடியா என்று தகாத வார்த்தைகளால் பேசும்போது  ஏன் அப்போது எந்த பத்திரிகையாளர்கள் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், அந்தச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 27ஆம் தேதி ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்த்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது ஒரு கேள்விக்கு அவர், பத்திரிக்கையாளர்களை presstitudes என்ற வார்த்தையை பயன்படுத்தி வசைபாடினார். அவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைத்தளத்திலும் எச். ராஜாவுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது, இந்நிலையில் எச். ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஊடகவியலாளர்  நலச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு.எச். ராஜா அவர்கள், ஊடகங்களை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதற்கு சில பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது எங்களுக்கு ஏற்புடையது அல்ல, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் தேசத்துக்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகங்களை மட்டும் அவ்வாறு பேசி இருந்தாரே தவிர தேசிய சிந்தனையுள்ள நாட்டுப்பற்றுள்ள ஊடகங்கள் குறித்து அவர் ஒருபோதும் விமர்சித்தது இல்லை.

ஆகவே அவருடைய அந்த விமர்சனத்தை தேசிய ஊடகவியலாளர் சங்கம் வரவேற்கிறது, திமுகவைச் சேர்ந்த அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் ஊடகங்களை ரெட்லைட் மீடியா என்று தகாத வார்த்தைகளால் பேசும் போது எந்த பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தேச விரோதமான செயல்படுகின்ற ஊடகங்களுக்கு தான் இதுபோன்ற இரண்டு நிலைப்பாடு இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. பஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு.எச் ராஜா அவர்கள் தேச விரோத, இந்து விரோத ஊடகங்கள் பற்றிய கருத்தை எமது சங்கம் முழுமனதோடு ஏற்கிறது. " ஜெய்ஹிந்த் " என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!