எச்.ராஜாவை கைது பண்ணுங்க.. இல்லன்னா நிலைமை இதுதான்.. காவல்துறைக்கு கெடு வைத்த சுப.வீரபாண்டியன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2021, 4:07 PM IST
Highlights

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன்னைப்பற்றி இழிவாகவும் அவதூறான கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருப்பதாக திராவிட  இயக்கத்  தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன்னைப்பற்றி இழிவாகவும் அவதூறான கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருப்பதாக திராவிட  இயக்கத்  தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சி தலைவர்களிலேயே எவரையும் மிக மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சிக்க கூடியவர் என பெயரெடுத்தவர் எச். ராஜா, அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பத்திரிக்கையாளர்களை மிக மோசமான வார்த்தையைக் கூறி வசைபாடியுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அது ஒருபுறம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பாஜக வைச் சேர்ந்த எச்.ராஜா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கடந்த 27ஆம் தேதி திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு அதுபற்றி கருத்துக்களை கூற செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா, எந்த சம்பந்தமும் இல்லாமல் தன்னை அவதூராக பேசியதாக கூறினார். ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தது தொடர்பாக சுப.வீரபாண்டியன் பொய் பரப்புரையை செய்வதால், அவரது மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது எனவும், சுப.வீரபாண்டியன் திமுகவின் அறிவாலயத்தின் வாசலில் இருந்து பிச்சை எடுக்கிறான்,

என்று வயது வித்தியாசம் பாராமல் தன்னை பற்றி எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி எச்.ராஜா பத்திரிகையாளர்கள் அனைவரையும் presstitudes என்ற வார்த்தையை பயன்படுத்தி வசைபாடியுள்ளதாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார். தொடர்ந்து அவதூறாக பேசி வரும் அவர் மூது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு காவல்துறையின் மூலம் எச். ராஜா  மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றும், நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

click me!